MAHALAKSHMI IYER (LYRIC PROVIDED BY தமிழ் மாறன்™ வேலாயுதம்) MUTHTHAM MUTHTHAM LYRICS
ஆண்: முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசைக் கலையின் உச்சமா
ஆயிரம் பாம்பு கொத்துமா
பெண்: ஒற்றை முத்தத்தில்
என் ஒற்றை முத்தத்தில்
உன் உச்சந்தலையில்
பித்தம் ஏறி ஆடினாய்
அடைமழை மேகம் போல்
ஓர் இடைவெளி இல்லாமல்
நான் அள்ளித் தந்தால்
இன்னும் என்ன ஆகுவாய்
ஆண்: இதழோடு இதமாக
முத்தம் கேட்N;டன் பதமாக
நீ தந்தாய்.. நீ தந்தாய்
என் எலும்பெல்லாம் தூளாய்ப் போக
ஆண்: முத்தம் முத்தம்...
பெண்: முத்தம் முத்தம்...
ஆண்: மெல்லிய பெண்ணே
இத்தனை சக்தி
எப்படி வந்தது உனக்கு?
இருதயம் மேலே மூளை கீழே
பௌதிக மாற்றம் எனக்கு
பெண்: சிந்திய முத்தம்
அது சைவம்தாண்டா
இனி அசைவ முத்தம்
இங்கு ஆரம்பம்தாண்டா
ஆண்: அடி உலகின் பசியெல்லாம்
முழு உருவாய் வந்த பெண்ணே
உன் முத்தம் ஒரு மூர்க்கம்
அதில் செத்தாலும் செத்துப் போவேன்
(செத்துப் போவேன்...செத்துப் போவேன்)
முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா?
ஆசைக் கலையின் உச்சமா?
நாந நாந நாநநா
பெண்: முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசைக் கலையின் உச்சமா
ஆயிரம் பாம்பு கொத்துமா
பெண்: கொட்டும் அருவியில் - வெட்டும்
மின்னலில் மின்சாரம்தான் இருக்கு
கொஞ்சும் முத்தம் சிந்தும் போதும்
கொஞ்சம் வோல்டேஜ் இருக்கு
ஆண்: மின்சாரத்தால்
அடி ஒரு முறை மரணம்
இந்த பெண் சாரத்தால்
தினம் பல முறை மரணம்
பெண்: ஒரு முத்தம் அது மரணம்
மறு முத்தம்; அது ஜனனம்
இதழ் நான்கும் விலகாமல்
சில நூற்றாண்டு வாழ்வோம் வாடா
ஆண்: முத்தம் முத்தம்...
பெண்: ஒற்றை முத்தத்தில்;;...
ஆண்: இதழோடு இதமாக...
lyric by தமிழ் மாறன்™ வேலாயுதம்,MALAYSIA
giganticwaves@yahoo.com
MAHALAKSHMI IYER (LYRIC PROVIDED BY தமிழ் மாறன்™ வேலாயுதம்) MUTHTHAM MUTHTHAM lyrics are property and copyright of their owners and are provided for educational purposes and personal use only.