TAMILBEAT.COM பார்க்காத என்ன பார்க்காத PAKKATHA ENNAI LYRICS

 
(பெண்) பார்க்காத என்ன பார்க்காத
கொட்டும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளிப் போகாத
கொடுத்தத திருப்பி நீ கேட்க
காதலும் கடனும் இல்ல
தூக்கத்தில் நின்னு பார்த்துக்கொள்ள
நடப்பதும் கூத்துமில்லை ............

(பார்க்காத)

(ஆண்) வேணா வேணாண்னு
நான் இருந்தேன் நீ தானே
என்ன இழூத்து விட்ட
போடி போடின்னு நான் துரத்த
வம்புல நீ தானே மாட்டி விட்ட
நல்லா இருந்த என் மனச நாராக கிழிச்சிப்புட்ட
கறுப்பா இருந்த என் இரவ கலரா மாத்திப் புட்ட
என்னுடன் நடந்த என் நிழல தனியா நடக்க விட்ட
உள்ள இருந்த என் உசிர வெளிய மிதக்க விட்ட..........

(பார்க்காத)

(பெண்) வேணா வேணாண்னு நினைக்கலையே
நானும் உன்னை வெறுக்கலையே
காணோம் காணோண்ணு நீ தேட
காதல் ஒண்ணும் தொலையலையே
ஒண்ணா இருந்த ஞாபகத்த நெஞ்சோடு சேர்த்து வச்சேன்
தனியா இருக்கும் வலிய மட்டும் தனியா அனுபவிச்சேன்
பறவையின் சிறகுகள் பிரிஞ்சாதான்; வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும் காதல் அதிகரிக்கும்.....

பார்க்காத என்ன பார்க்காத
கொட்டும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளிப் போகாத
கொடுத்தத திருப்பி நான் கேட்க கடனா கொடுக்கலையே
உனக்குள்ள தானே நான் இருக்கேன் உனக்கேன் புரியலையே