WWW.TAMILMAALAI.COM அன்புள்ள காதலி ANBULLA KADHALI LYRICS
ஆண்: அன்புள்ள காதலி அன்றாடம் என்னைக் காதலி
உன்னைப் போல் என்னைப் போல் உலகத்தில் யாரடி
பெண்: அன்புள்ள காதலா என் மீது ரொம்ப ஆவலா
என்றென்றும் நீ தானே இதயத்தின் காவலா
ஆண்: கண்ணாலே கண்ணாலே கவ்விக் கவ்விக் கொள்ளவா
தூக்கத்தில் நான் உன்னை தொட்டுத் தொட்டுக் கிள்ளவா
பெண்: உன் கண்ணும் என் கண்ணும் சிக்கிமுக்கிக் கல்லடா
உன் தேகம் என் தேகம் ஒண்ணுக்குள்ள ஒண்ணடா
ஆண்: அன்புள்ள காதலி அன்றாடம் என்னைக் காதலி
உன்னைப் போல் என்னைப் போல் உலகத்தில் யாரடி
ஆண்: ஐ லவ் யூ சொல்கின்ற இருவிழி வானொலி
பொய் வேஷம் போடாத அழகிய காதலி
பெண்: மின்சார கையாலே உடலினைத் தீண்டடா
உன் காந்தக் கண்ணாலே உயிரினைத் தூண்டடா
ஆண்: நான் தேடிடும் தேடிடும் தேவதை நீயடி
உன் ஒவ்வொரு பாகமும் ஓவியம் தானடி
பெண்: கண்ணாடி பூச்செடி கண்முன்னே நிக்குது
உன்னை நான் கண்டதும் உள்நாக்கு திக்குதே
ஆண்: புதிர் போட்டதை புதிர் போட்டதை விடை கண்டு கொண்டேனே
அதை உன்னிடம் எதிர்பார்த்துதான் அட நேரில் வந்தேனே
பெண்: ஆண்பாதி பெண்பாதி ஷிவ ஷிவ தாண்டவா
உன் போலே என் காதல் உயர்ந்தது ஆண்டவா
ஆண்: நீ எந்தன் நீ எந்தன் உடல் பொருள் ஆவியே
என் கைகள் உன் மேனி திறந்திடும் சாவியே
பெண்: நான் சொல்வதை கேட்கிற செல்லமே ஓடிவா வா வா
என் வெண்ணிலா மேனியில் வெட்கத்தை மூடவா
ஆண்: பெண்ணென்ற வார்த்தைக்கு அர்த்தங்கள் ஆயிரம்
ஒவ்வொன்றாய் அறிந்திட ஓர் ஜென்மம் போதுமா
பெண்: இது காதலின் விளையாட்டுத்தான் அதை கண்டு கொள்ளாதே
உன் வார்த்தைகள் வீண் வார்த்தைகள் வெறும் வாயை மெல்லாதே
ஆண்: அன்புள்ள காதலி அன்றாடம் என்னைக் காதலி
உன்னைப் போல் என்னைப் போல் உலகத்தில் யாரடி
பெண்: அன்புள்ள காதலா என் மீது ரொம்ப ஆவலா
என்றென்றும் நீ தானே இதயத்தின் காவலா
WWW.TAMILMAALAI.COM அன்புள்ள காதலி ANBULLA KADHALI lyrics are property and copyright of their owners and are provided for educational purposes and personal use only.