JEYARAM,SHREYA GHOSAL நெஞ்சத்திலே நெஞ்சத்திலே NENJATHILAE LYRICS

 
பெண்: நெஞ்சத்திலே நெஞ்சத்திலே
நீ தானே மொத்தத்திலே...

ஆண்: மொத்தத்திலே உன் அழகைக்
கண்டேனே முத்தத்திலே...

பெண்: முத்தத்திலே.. ஓசையில்லை..
சத்தமெல்லாம்.. வெட்கத்திலே..
ஆண்: வெட்கத்திலே.. தத்தளித்தால்..
காதல் பொங்கும்..
நெஞ்சத்திலே

நெஞ்சத்திலே...

ஆண்: நீ பேசியும்.. நான் பேசியும்..
தீராதம்மா பொழுதுகள்...

பெண்: பொழுதுகள்.. தீரலாம்..
மாறாது என்றும் இனிமைகள்...

ஆண்: இனிமைகள்.. முளைத்தன..
ஆதாம் ஏவால் தனிமையில்...

பெண்: தனிமையில்.. இருவரும்..
பேசும் மவுனம் இளம் வெயில்....

ஆண்: வெயில் சாரல் அடிக்கும்..
நிழல் கூடி அணைக்கும்..

பெண்: அணைக்கும் ஆசை ஆயிரம்..
கலைக்கும் பாஷை பாசுரம்..

ஆண்: சுரம் ஏழிலும்.. சுவை ஆறிடும்..
கூடும் இன்பம் நெஞ்சத்திலே...

நெஞ்சத்திலே...

பெண்: வா என்பதும்.. போ என்பதும்..
காதல் மொழியில் ஒரு பொருள்...

ஆண்: ஒரு பொருள்.. தருவதால்..
நீயும் நானும் மறைபொருள்

பெண்: பொருள் வரும்.. புகழ் வரும்..
ஓர் நாள் வாழ்வில் எது சுகம்...

ஆண்: சுகம் தரும்.. சுவை தரும்..
காதல் போல எது வரும்...

பெண்: வரும் வார்த்தை தயங்கும்..
நம்மைப் பார்த்து மயங்கும்..

ஆண்: மயங்கும் மாலை சூரியன்..
கிரங்கும் நாளும் ஐம்புலன்..

பெண்: புலன் ஐந்திலும்.. திசை நான்கிலும்..
தேடும் இன்பம் நெஞ்சத்திலே...

நெஞ்சத்திலே...