SAINDHAVI,VINITH இரு விழியோ சிறகடிக்கும் LYRICS

 
ஆண்: இரு விழியோ சிறகடிக்கும்

பெண்: இரு விழியோ.. சிறகடிக்கும்..
இமைகளிளோ வெடிவெடிக்கும்
இதயத்திலே ஒரு கனவு
உதயத்திலே வடம் பிடிக்கும்
காதலால் தானே

குழு: மணல்வெளிப் போல கிடக்கிற ஆi
மழைத் துளிப் போல குதிக்கிற நாளை
விளக்கொளிப் போல துடிக்கிற நெஞ்சம்
விசைத்தறிப் போல அடிக்கிற நாளை

ஆண்: நானும் இந்தத் தேதி
அடி காதல் தின்ற மீதி
தோழி நீயும் வாடி
இருத் தோளும் தானே தூளி

குழு: இரு விழியோ சிறகடிக்கும்
இமைகளிளோ வெடிவெடிக்கும்
இதயத்திலே ஒரு கனவு
உதயத்திலே வடம் பிடிக்கும்

ஆண்: காதலால் தானே...

குழு: ஒரு பாறை மெல்ல மெழுகானதென்ன
உனைக் கண்ட வேலை உயிர் பூத்ததென்ன

ஆண்: மழையாய் விழுந்தாய்

குழு: மூக்குத்திப் போலே ஆடாத நெஞ்சம்
நீ பார்த்த தாலே தோடாச்சு நெஞ்சம்

பெண்: புயலாய்.... ஆனாயே....

ஆண்: சங்கில் ஓசைப் போலே
உன்னில் தங்கிக் கொள்ள ஆசை

பெண்: மின்னல் போல கண்ணில்
உந்தன் பிம்பம் பூக்கும் ஆசை

ஆண்: உயிரோடு உயிர் பேச
அடிக் காதல் தானே பாஷை

பெண்: இது வரமா....

குழு: மரங்களில் ஏங்கி.. கிரங்கிடும் தேகம்..
கரங்களைத் தீண்டி.. உறங்கிடும் மாயம்..

பெண்: வெறும் சுகமா....

குழு: சுகங்களைத் தேடும் இடங்களின் ஓரம்
படங்களைப் போடும் நகங்களில் சாயம்

இரு விழியோ...

குழு: கதை பேசிக் கொள்ள
இதழ் தீயை தூண்டு
அலை பேசிப் போலே
காதோரம் சிந்து

பெண்: உடும்பாய்.... ஆவேனே...

குழு: இவள் கொண்ட மேனி
மலையாளச் சோலை
இதழாலே தொட்டால்
மருதாணிச் சாலை

ஆண்: சிவந்தே.... போனேனே....

பெண்: உறங்கும் எனது கனவு
அதில் உனது பெயரில் களவு

ஆண்: மயங்கும் எனது இரவு
உந்தன் மனது பார்க்கும் உளவு

பெண்: இதைக் காண வருமோடி
ஒரு கோடி வான நிலவு

ஆண்: இது குளிரா....

குழு: கொதிக்கிற தேகம்.. குலைகிற தேகம்..
இருவரின் நெஞ்சில்.. சமுத்திரத் தாகம்..

ஆண்: இளம் கதிரா....

குழு: இளங்கதிர் வந்து உரசிடும் காலம்
இவர்களின் தேகம் உறங்கிடும் நேரம்

இரு விழியோ...