HARINI,KARTHIK மெதுவா.. மெதுவா.. LYRICS

 
ஆண்: மெதுவா.. மெதுவா.. மெதுவா... நீயே சொல்
இதுதான் முதல் நாள் உறவா....
பெண்: மெதுவா.. மெதுவா.. மெதுவா... நீயே சொல்
இதுதான் பல நாள் கனவா....

ஆண்: இதுவா இதுவா இதுவா...
நாம் காதல் தொடங்கும் திருநாள் இதுவா....

பெண்: கேள்வியே ஏனடா..
காதலை போய்க் கேளடா..

மெதுவா...

ஆண்: நாம் சொல்வதும்.. நாம் கேட்பதும்..
அறிவார் அறிவார் எவரோ....

பெண்: ஆண்கள் காதலும்.. பெண்கள் காதலும்..
உலகார் அறியாதவரோ....

ஆண்: வணக்கத்திற்குரிய உறவு இதுவே
சிறை புகுந்துவிட்டால் இமையே கதவு

பெண்: இமை இடைவெளியில் உனை நான் ரசிப்பேன்
இமை கடந்தப் பின்னே எதை நான் ருசிப்பேன்

ஆண்: இதைப் போல் வேறு நோயில்லையடி என்தாயே...

மெதுவா...

பெண்: உன் தோட்டத்தில் என் ஞாபகம்
விதையா.. மரமா.. விழுதா....

ஆண்: உன் நெஞ்சினில் என் ஞாபகம்
வரவா.. செலவா.. கடனா....

பெண்: கடன் தருவதற்கே.. உனை நான் தொடர்ந்தேன்
முதல் தவணையிலே.. முழுதாய் இழந்தேன்

ஆண்: உனை இழந்தபின்னே.. எதை நான் பெறுவேன்
இனி இழப்பதற்கு.. எதை நான் தருவேன்

பெண்: நமைப்போல வேறு ஒரு நாம் இல்லையே
வா.. வா.. ஆஹா....

மெதுவா....